☰
×

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும் ஆட்சி கோமாவிலும் உள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்..!

 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும் ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ மற்றும் பொதுமக்களைத் தாக்கிய துணை சபாநாயகரால் மாண்பு சீரழிந்துவிட்டதாகவும் சாடியுள்ளார். குற்றவாளிகளுக்குப் பயமின்றி காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும், பகுதிநேர முதல்வராக இருக்கும் விஜய்க்குப் பொறுப்பே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,,

சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!

😳 ஒரே நாளில் 17 கொலைகள்!

😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!

😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,

குற்றவாளிகளுக்குப் பயமில்லை!

காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!

த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!

மொத்தத்தில்,

🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!

சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails

— M.K.Stalin (@mkstalin) November 10, 2026