×

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் - தி.மு.க வேட்பாளர் உறுதி

 

ஆர்​.கே.நகர் தொகுதியில் திமுக சார்​பில் தற்​போதைய எம்​எல்ஏ ஜெ.ஜான் எபினேசர் மீண்​டும் போட்​டி​யிடு​கி​றார்.

அதி​முக சார்​பில் ஆர்​.எஸ்​.​ராஜேஷ், தவெக சார்​பில் மரிய வில்​சன், நாம் தமி​ழர் கட்சி சார்​பில் வெண்​ணிலா தாயு​மான​வன் ஆகி​யோர் போட்​டி​யிடு​கின்​ற​னர்.

திமுக வேட்​பாளர் ஜான் எபினேசர், கொருக்​குப்பேட்டை எழில் நகர் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் நேற்று வாக்கு சேகரித்​தார். விளை​யாட்டு வளாகங்​கள், ரேஷன் கடைகள் கட்​டியது உள்​ளிட்ட சாதனை​களை எடுத்​துரைத்​தார்.மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வந்​தால் மகளிர் உரிமைத்​தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்​வு, ரூ.8 ஆயிரம் கூப்​பன் வழங்​கும் ‘இல்​லத்​தரசி’ திட்​டம் உள்​ளிட்ட வாக்​குறு​தி​களைக் கூறி களமாடி வரு​கி​றார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜே.ஜே.எபினேசர் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் மக்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர்.