#BREAKING பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு
பிப்ரவரி 26 தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வர மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை தொடங்கியது. இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வரும் பிப்ரவரி 26ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியில் 2021 ம் ஆண்டு 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
திமுக தரப்பில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அறிவித்தது கொ.ம.தே.க. சக்தி நடராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அறிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.