திமுகவினர் கள்ள ஓட்டுப்போடுவதாக தவெகவினர் வாக்குவாதம்
வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் மோதல் மூண்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திமுகவினர் மோதல் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. கள்ள ஓட்டு போட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கூறி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சையத்புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பதட்டமான சூழல் நிலவியது.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசி டிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் வாக்கு பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.