☰
×

“ஒரு நடிகரிடம் போய் ஆட்சியை கொடுத்துவிட்டீர்கள் என்று எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்”- ஆ.ராசா

 

தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தாராபுரம் நகரில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா  வாக்கு சேகரித்தார்.


தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக அக்ரஹாரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தூய தோமா ஆலயத்தில் வழிபாடு முடித்துவந்த மக்களிடையே கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு , துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.

பரப்புரையில் பேசிய ஆ.ராசா, “தவெக கூட்டணி ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி. ஜெயித்த 13 பேரை கூட்டிச்சென்ற கூட்டணி. டெல்லியில் உள்ளவர்கள் திமுகவை பார்த்து பயந்தார்கள். ஆனால் இன்று, ஒரு நடிகரிடம் போய் ஆட்சியை கொடுத்துவிட்டீர்கள் என்று எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். அதை திருத்த தாராபுரம் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.