தி.மு.க.- அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது 100 சதவீதம் உண்மை - அமைச்சர் நிர்மல்குமார்..!!
அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் அளித்த பேட்டி:
மாற்றத்தை எதிர்பார்த்து தமிழக மக்கள் அளித்த தீர்ப்பிற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் பழனிசாமியும், ஸ்டாலினும், பழனிசாமி மகனும், சில தொழில் அதிபர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக செய்தி வந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதற்காக கட்சி நடத்தினரோ, அதற்கு எதிராக பழனிசாமி செயல்பட்டதால், எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் த.வெ.க.,வை ஆதரித்துள்ளனர். உதயநிதி, ஸ்டாலின், பழனிசாமி ஆகியோர் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர் என, அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களே கூறுகின்றனர்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது 100 சதவீதம் உண்மை. சில முக்கிய தலைவர்களால், அந்த 'கள்ளக் கூட்டணி' நிராகரிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில் சிலர் முதல்வர் விஜயை சந்திக்க விரும்பியதால், அவர்களை முதல்வர் சந்தித்தார்; ஆனால், பழனிசாமியை சந்திக்கவில்லை. சிலரை சில நேரத்தில் சந்தித்தால் சரியாக இருக்காது; அப்படி சந்தித்தால் அது மக்களுக்கு எதிராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்