☰
×

"வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்.." - வன்னி அரசுக்கு ஆ.ராசா பதிலடி 

 

‘அரைவேக்காடு’களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சிப் பெண் நிர்வாகியின் ‘தேவையற்ற கைதைக்’ கண்டிப்பது, அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்துகொள்ள முடியாதவரல்ல நீங்கள் என அமைச்சர் வன்னி அரசுக்கு எம்பி ஆ. ராசா  பதிலடி கொடுத்துள்ளார். 

கோட்பாடு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். இப்போது தோமுகவுக்கும் வெட்கமில்லை, நாம் தமிழர் கட்சிக்கும் வெட்கமில்லை என அமைச்சர் வன்னி அரசு கூறிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ஆ. ராசா தனது எக்ஸ் தளத்தில், "‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்! இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!" எனக் குறிப்பிட்டுள்ளார்.