“அவர் யாருக்கு பிறந்தவர்..? சர்ச்சை பேச்சை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை” - ஆ.ராசா
சென்னை சைதாப்பேட்டை போராட்டத்தின் போது பேசிய அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரித்தம் தெரிவித்தார் ஆ.ராசா.
சட்டப்பேரவையில்திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, “நிர்மல்குமார் அவன் மந்திரியா..? என்ன இழவு என தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுவது போல பல கட்சிகள் மாறியவர். எனக்கு அவர் யாருக்கு பிறந்தவர் என்று சந்தேகம் உள்ளது. இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு முதலமைச்சர். கை, கால்களை ஆட்டுவதற்கா ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாய்” என பேசியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில் ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில், “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.