☰
×

"அன்பில் மகேஷ் கைது, எங்களை விசாரணைக்கு அழைப்பது இதெல்லாம் Drama.."- ஆ. ராசா 

 

முதலமைச்சர் குறித்தும், அமைச்சர் நிர்மல் குமாரின் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுகவின் ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் சைதாப்பேட்டை போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, "என்னிடம் 120 கேள்விகளையும் மா.சுப்பிரமணியத்திடம் 70 கேள்விகளும் போலீஸார் கேட்டனர்.  என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள். அன்பில் மகேஷ் கைது, எங்களை விசாரணைக்கு அழைப்பது இதெல்லாம் Drama... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வை மூடி மறைக்க இது ஒரு Diversion. ஆட்சியாளர்களுக்கு தான் மன உளைச்சல் எங்களுக்கு இல்ல. அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்த அவர்களுக்குத் தெரியவில்லை. நேற்று ஒரு டிராமா.. இன்று ஒரு டிராமா... நாளைக்கு சில டிராமா வரும்.. இவங்களே தப்பி ஓடவிட்டு இவர்களே பிடித்த மாதிரி காட்டுறாங்க!" எனக் கூறினார்.