×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததின் மூலம் இரண்டு பேரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அவரது மனைவி பிரேமலதாவுக்கு லேசான தொற்று, காய்ச்சல் இருந்ததாதல் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இருவரின் உடல் நிலையும் முன்னேற்றம் அடைந்துள்ளதால்
 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ்  செய்யப்படுகின்றனர்.

சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததின்  மூலம் இரண்டு பேரின்  உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். 


கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில்  உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொற்று அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அவரது மனைவி பிரேமலதாவுக்கு லேசான தொற்று, காய்ச்சல் இருந்ததாதல் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது இருவரின் உடல் நிலையும்  முன்னேற்றம் அடைந்துள்ளதால்  தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ்  செய்யப்படுகின்றனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.