விஜயகாந்த் குரு பூஜையில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு
Updated: Dec 25, 2025, 20:38 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையில் பங்கேற்க வருமாறு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் அழைப்பு விடுத்தார்.
ஜனவரி 28 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதற்கான குருபூஜையில் கலந்துகொள்ளுமாறு, நிகழ்ச்சி அழைப்பிதழை சுதீஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். டிச.28இல் குருபூஜை நடப்பதையொட்டி, முதல் ஆளாக ஈபிஎஸ்ஸின் வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்த தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதன்பின் முதல்வரை சந்தித்துள்ளார். அவருடன் தலைமைக்கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதியும் உடன் சென்றிந்தார்.