‘பைரவர் வடிவம்’... மனித நேயத்தோடு நாய்களைக் காப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 அன்று கொண்டாடப்படும் சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாய்கள் நமது உயிரின குடும்பத்தின் ஒரு பகுதி. தெரு நாய்களை அழிப்பதற்கு பதில், கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம். பைரவர் வடிவமாக வழிபடப்படும் நாய்கள், விஸ்வாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்துகின்றன. நாய்க்கடிக்கு உடனடியாக சிகிச்சை பெற விழிப்புணர்வு தேவை. மேலும் மனித நேயத்துடன் இந்த உயிரினத்தை காப்போம். மேலும், இந்த நாளில், நாய்களின் நலனை உறுதி செய்யவும், அவற்றுக்கு உரிய பராமரிப்பு மற்றும் அன்பை வழங்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் மற்றும் தெரு நாய்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும். நாய்களைப் பாதுகாப்பதும், அவற்றுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதும் நமது கடமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.