வெற்றிப் பயணத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிப்பு- பிரேமலதா விஜயகாந்த்
எடுத்தவுடன் எல்லாவற்றிற்கும் இலவசம் இலவசம்னு ஏன் அறிவிக்கிறாங்க? இன்னைக்கு பஸ் வைத்துள்ள உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ., “வெற்றிப் பயண திட்டத்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . வெற்றி பயணத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே போக்குவரத்துத்துறையும், மின்சாரத்துறையும் கடனில் உள்ள நிலையில், அனைத்தையும் ‘இலவசம், இலவசம்’ என அறிவித்துவிடுகிறார்கள். ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு, அந்தத் திட்டம் மக்களிடம் முறையாகச் சென்றடைகிறதா, அனைத்து மக்களும் பயன்பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து இலவசத்திட்டங்களை அறிவித்து வருவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரச் சூழலும் அத்தியாவசியத்துறையின் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.