×

“போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பார்த்து”- திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்த பிரேமலதா

 

வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், “வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் இன்று (03.04.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டியபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. 



மாபெரும் ஆதரவளித்த அயனாவரம் மக்களுக்கும், எனக்காகச் சிறப்பான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் அவர்களின் ஆசீர்வாதம் நம்முடைய வெற்றியை மேலும் 
உறுதிசெய்யும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.