×

20 ஆண்டுகளுக்கு பின்... ஏமாற்றிய பழனிசாமி! வந்தவுடன் அள்ளி கொடுத்த மு.க.ஸ்டாலின்

 

தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, 20 ஆண்டுகள் கழித்து தனது முதல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளது. 2011-2016ல் 29 எம்.எல்.ஏக்களை தேமுதிக வைத்திருந்தபோதும் மாநிலங்களவை கனவு நிறைவேறவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்தபோது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி அளித்தப்படி தரப்படவில்லை. ஆகவே அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைத்தது. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது, வேட்பாளர் யார்? என்பதனை நாளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் பேட்டியளித்துள்ளார். திமுக- தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி சட்டமன்ற இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.