#BREAKING தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக
Updated: Mar 3, 2026, 21:03 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எ.சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை இடம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக- தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு உறுப்பினர் பதவி கிடைக்க உள்ள நிலையில் ஒரு உறுப்பினரிடம் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துவரும் நிலையில் தேமுதிகவுக்கு ஒரு எம்பி சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் எல்கே சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தரமறுத்ததால் திமுக கூட்டணிக்கு வந்த தேமுதிகவிற்கு அந்த இடத்தை கொடுத்துள்ளது திமுக.