20 சீட் கேட்கும் தேமுதிக- 5 மட்டுமே கொடுக்கும் திமுக
Jan 30, 2026, 15:13 IST
திமுகவிடம் தேமுதிக கேட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் தேமுதிக 20 சட்டமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தலைமை கூறியதாகவும், 12 தொகுதிகளையாவது கொடுங்கள் என தற்போது தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 4-லிருந்து 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என திமுக உறுதியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.