×

’என்னது விஜய் வருங்கால பிரதமரா?’ - டி.கே.சிவக்குமார் பதில்

 

தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

அமித்ஷா தலைமையில் இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், “தென் மாநில முதல்வர்கள் மாநாடு நன்றாக முடிந்தது. தென் மாநிலங்கள் அனைத்தும் பயனடையும் வகையில் பல முக்கிய பிரச்சனைகளை பேசியிருக்கிறோம். 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாக கொள்ள வேண்டும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுவே எங்களின் முதன்மையான கோரிக்கை. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ஒரே முடிவுக்கு வந்துள்ளோம். நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் முறையிட்டுள்ளோம். அதற்கு தனி கூட்டம் கூட்டி, அமைதியான முறையில் தீர்வுக்காண அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். 

அமித்ஷா முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கு நான் ஒரு வாக்குறுதியை அளித்துள்ளேன். அதன்படி, மேகதாது உங்களுக்காக தான்... மேகதாது அணையில் 5 டிஎம்சி குடிநீரை தவிர வேறு ஒரு சொட்டு நீரைக்கூட நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என விஜய்க்கு வாக்கு கொடுத்துள்ளேன். எஞ்சிய நீர் அனைத்தும் மேகதாது அணையில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குதான் செல்லும் என வாக்குறுதி கொடுத்தேன். தமிழ்நாடும், புதுச்சேரியும் இந்த விஷயத்தில் நிம்மதியாக இருக்கலாம். இந்த அணை உங்களுக்காகதான் கட்டுப்படுகிறதே தவிர எங்களுக்காக அல்ல... முதலமைச்சர் விஜய் பிரதமாராவார் என தவெக எம்.எல்.ஏக்கள் கூறுவது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம். பெரிய விஷயங்கள் குறித்து இப்போது பேச வேண்டாம். நாமெல்லாம் இன்னும் இளமையாக இருக்கிறோம்” என்றார்.