“சூழல் சரியில்லை... விஜய் வர வேண்டாம்”- சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம, முதல்வர் விஜய் இப்போதைக்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம். இங்கு இப்போதைக்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால் உரிய சூழல் வரும்போது ஒரு நாளில் சந்திக்கலாம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். தற்போதைக்கு ஹாரங்கியில் 95%, கபிணியில் 83%, கேஆர்எஸ்-ல் 36%, ஹேமாவதியில் 61% நீர் இருப்பு உள்ளது” என்றார்.