×

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்- டி.கே.சிவக்குமார் 

 

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்துள்ள பேட்டியில், “மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கே அதிக நன்மை கிடைக்கும். இந்த அணையில் சேமிக்கப்படும் நீர் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பாசனத்துக்கு இல்லை.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்குத்தான் அதிகளவு பலன் கிடைக்கும். மேகதாது அணை, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது. மேகதாது அணை ஒரு பேலன்சிங் அணை. அதில் இருந்து ஒரு பக்கெட் நீர் கூட பாசனத்திற்காக எடுக்கமாட்டோம். காவிரி விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர். மேகதாது அணையில் இருந்து பெங்களூரு குடிநீருக்கும், மின்சாரத்துக்கும் மட்டுமே நீர் எடுக்கப்படும். காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றார்.