☰
×

"மேகதாதுவில் அணை கட்ட, தமிழ்நாடு உள்பட யாருடைய அனுமதியும் தேவையில்லை"- டி.கே.சிவக்குமார் 

 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருக்கும் சூழலில், மேகதாதுவில் அணை கட்ட, தமிழ்நாடு உள்பட யாருடைய அனுமதியும் தேவையில்லை என  கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்  கூறியுள்ளார். 

கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய  கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "மேகதாது விவகாரத்தில் சண்டையிட விரும்பவில்லை. மேகதாது அணையால் தமிழகத்திற்கு தான் அதிக நன்மைகள் கிடைக்கும்.  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகாவுக்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்த மாட்டோம். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு 177 TMC நீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது" என்றார்.