☰
×

தீபாவளி - சிவகாசி பட்டாசுகள் ரூ.7000 கோடிக்கு வர்த்தகம் 

 

சிவகாசி பட்டாசுகள் இந்த ஆண்டு நாடு முழுவதும் ரூ.7,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகாசி பட்டாசுகள் இந்த ஆண்டு நாடு முழுவதும் ரூ.7,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூலப்பொருள் விலை உயர்வால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தியப் பட்டாசுத் தேவையில் சிவகாசியின் பங்கு 90 சதவீதம் ஆகும்.  நாடு முழுவதும் சரவெடிப் பட்டாசுக்கான தடை நீங்கியதால் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்வதாக பட்டாசு வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.