“சோசியல் மீடியா Morphing.. CM Sir We Need Justice.. CM சாரின் அடியாளால் நிறைய பெண்கள் பாதிப்பு”- திவ்யா சத்யராஜ்
தமிழகத்தில் தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜே.விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக, பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான சத்யராஜின் மகளும், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான திவ்யா சத்யராஜ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், “தற்போது தமிழ்நாட்டில் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கென்றே ஒரு தனிப்படை செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தற்போதைய முதலமைச்சர் சாருக்கு என்று ஒரு தனி அடியாள் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. தவெக அரசு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்துக் கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டி வருகிறார். மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் அரசுக்கு வேண்டும். அதை விடுத்து அதிகார பலத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்தக் கூடாது
நாங்க ஆளும் கட்சி கிடையாது.. ஆனால் யாருடைய வாழ்க்கையையும் அழிக்கிற கட்சி கிடையாது.. சோசியல் மீடியா Morphing.. CM Sir We Need Justice.. CM சாரின் அடியாளால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாஃபியா கம்பெனி நடத்துகிறார். உங்க அடியாள் சோசியல் மீடியா மாஃபியை வைத்து ரொம்ப கேவலமாக பேசுவாரு! இந்த ஒரு மாசத்துல த.வெ.க அரசு செய்த சாதனையா நான் எதுவும் பாக்கல.. நான் சரியா பாக்கலையோ என்னமோ.? குற்றம் நடக்கும் போது ஆளுங்கட்சி அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம். நான் இனிமேல் சத்தமாக பேசப் போகிறேன். பெண்களுக்கு தேவை Power. இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக அஞ்சாது. மக்களின் உண்மையான உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.