சென்னை மேயராகிறாரா திவ்யா சத்யராஜ்?
Mar 29, 2026, 16:46 IST
இன்னும் ஓரிரு நாட்களில் எனது அரசியல் பயணம் குறித்த ஒரு நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எம்.எல்.ஏ.சீட் கொடுக்கப்படவில்லை. திமுக சார்பில் போட்டியிட திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்திருந்தார். கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனத்தைத் தவிர்க்கவும், ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.