×

குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 84 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தங்களது வாக்குகளை மும்முரமாக செலுத்திய மக்கள், வரும் மே 4-ஆம் தேதி வரப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 84 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. அங்கு 76.35% வாக்குகளும், ராமநாதபுரம் 76.10% வாக்குகளும், திருநெல்வேலியில் 73.37% வாக்குகளும், சிவகங்கையில் 76.01% வாக்குகளும், நீலகிரியில் 78.29% வாக்குகளும்,தூத்துக்குடியில் 79369% வாக்குகளும் பதிவாகியுள்ளன.