×

சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து மக்களின் நலன் கருதி அவ்வபோது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் நேற்று முன்தினம் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவில் பல்வேறு தாராள தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டது. இதில் வழிப்பாட்டு தலங்கள், பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. அதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார்
 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து மக்களின் நலன் கருதி அவ்வபோது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் நேற்று முன்தினம் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவில் பல்வேறு தாராள தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டது. இதில் வழிப்பாட்டு தலங்கள், பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.

அதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆலைகள் ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிகிறது.