தினகரன் மீது அதிருப்தி- 3,000க்கும் மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகல்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் வடுவூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரசியலில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதால், அவர் மீது அதிருப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள் நாளுக்கு நாள் அமமுக விலிருந்து விலகி வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் கிராமத்தில் அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக மாநில மின்சார பிரிவு அணி செயலாளர் ராவணன் , அமமுக ஒன்றிய விவசாய அணி செயலாளர் சுப்பையன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சூரிய சேகர் உள்ளிட்ட மாநில , மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் வடுவூர் வடபாதி , வடுவூர் தென்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் , மூவர்க்கோட்டை உள்ளிட்ட நான்கு ஊராட்சியை சேர்ந்த சுமார் 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராவணன் டிடிவி தினகரன் அரசியல் நிலைப்பாடு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வரும் வகையில் தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது உள்ள நம்பிக்கை பலன் அளிக்க வில்லை தலைமை சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றினோம் அவர் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் அமமுக விலிருந்து விலகுவதாக மன வேதனையுடன் தெரிவித்தனர். ஊராட்சிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.