×

சட்டப்பேரவை கூட்டத்தொடரை எங்கே நடத்துவது? கலைவாணர் அரங்கில் மீண்டும் ஆய்வு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனா வைரஸ் பரவியதால், சட்டபேரவை கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என சந்தேகம் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் கூட்டத்தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கூட்டத்தொடரை எங்கே நடத்துவது என்பது பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மாற்று இடத்தில்
 

தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனா வைரஸ் பரவியதால், சட்டபேரவை கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என சந்தேகம் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் கூட்டத்தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கூட்டத்தொடரை எங்கே நடத்துவது என்பது பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் மாற்று இடத்தில் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தலைமை செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மீண்டும் கலைவாணர் அரங்கில் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.