☰
×

"மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!"- வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பரபரப்பு அறிக்கை

 

மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

நாகையில் DRI நடத்திய சோதனையில், ரூ.100 கோடி மதிப்புள்ள 137 KG 'க்ரிஸ்டல் மெத்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை, கடல் வழியாக நடுக்கடலில் கைமாற்றி இலங்கைக்குக் கடத்த முயன்ற கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டது. 6 பைகளில் வைக்கப்பட்டிருந்த 27 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த ரூ 10 லட்சம் ரொக்கம், 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேர் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 5 சர்வதேச போதைப்பொருள் கடத்தலை தடுத்து, மிகப்பெரிய கடத்தல் வலையமைப்பை தகர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.