☰
×

பொது நூலகத்துறை இயக்குனர் ஜெயந்தி பதவி பறிப்பு

 

பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் பொது நூலகத்துறை செயலாளர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை எழுதியிருக்கிறார். 

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் பொது நூலகத்துறை செயலாளர் ஜெயந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  பொது நூலகத்துறையின் புதிய இயக்குனராக  ஷஜிவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.