ஆ.ராசா மீது இயக்குனர் லெனின் பாரதி, எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் பதிலடி..!
தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் எக்ஸ் (X) பதிவிற்கு இயக்குனர் லெனின் பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”!அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? என பதிவித்திருந்தார் ஆ.ராசா
இது குறித்து லெனின் பாரதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறிகொண்ட அருவருப்பான தன்மையை நன்றாகப் பாருங்களென்று தன்னைத்தானே தோலுரித்து காட்டிக்கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்
அதே போல் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனக்கு பயன்பட்டால் அலங்கார தமிழில் உச்சி முகர்வது, முரண்பட்டால் மிக மோசமாக பழிப்பது திமுகவின் வரலாற்று பண்புகளில் ஒன்று.
பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என யாரும் இதிலிருந்து தப்பியவர்களில்லை.
என பதிவித்துள்ளார்