தவெக வென்றால் மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று அர்த்தம் - இயக்குநர் அமீர்
இன்றைய தேர்தல் என்பது அரசியல் வரலாற்றிலேய ஒரு கரும்புள்ளியான தேர்தல் என இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கிய நிலையில், 1 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 55.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 56.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் அமீர், “இன்றைய தேர்தல் என்பது அரசியல் வரலாற்றிலேய ஒரு கரும்புள்ளியான தேர்தல். சத்யபாமாவும், மரகதமும் வென்றால் மக்கள் தோற்றுவிட்டார்கள் என்று அர்த்தம். அவர்கள் இருவரும் தோற்றுவிட்டால் மக்கள் வென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.