×

இனி ஈரோடு அம்மா உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்! சிறியவர்கள், முதியவர்களுக்கு மட்டும் பார்சல்!

ஈரோடு மாநகராட்சி நான்கு மண்டங்களில் காந்திஜி ரோடு, கொல்லம்பாளையம் அரசு தலைமை ஆஸ்பத்திரி , சின்ன மார்க்கெட் பகுதி, பெரியசேமூர் உட்பட்ட பகுதிகளில் 11 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஒரு உணவகத்துக்கு பத்து பெண்கள் வீதம், சமையல் செய்வது முதல் பார்சல் செய்வது வரை அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. மூன்று மாதத்திற்கு
 

ஈரோடு மாநகராட்சி நான்கு மண்டங்களில் காந்திஜி ரோடு, கொல்லம்பாளையம் அரசு தலைமை ஆஸ்பத்திரி , சின்ன மார்க்கெட் பகுதி, பெரியசேமூர் உட்பட்ட பகுதிகளில் 11 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஒரு உணவகத்துக்கு பத்து பெண்கள் வீதம், சமையல் செய்வது முதல் பார்சல் செய்வது வரை அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. மூன்று மாதத்திற்கு இந்த இலவச உணவு வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஏழை மக்கள், கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.
இதையடுத்து மீண்டும் கட்டணம் செலுத்தி அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சாப்பிட்டு வந்தனர். கொரோனா பரவலை தடுக்க அனைத்து அம்மா உணவகத்திலும் அமர்ந்து சப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்திலிருந்து, பாக்கு மட்டை தட்டிலும், அதன் பின் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஓட்டல்கள், உள்ளிட்ட அனைத்து உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி அம்மா உணவகத்திலும் அமர்ந்து சப்பிட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமர்ந்து சாப்பிட்டனர்.

அம்மா உணவகத்துக்கு வரும்முன் நுழைவாயில் சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது. அதனை கைகளால் சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே சாப்பிட்டு வருபவர்கள் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், ‘’தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பல்வேறு தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அம்மா உணவகங்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம் . அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும். சாப்பிடும்போது மட்டும் மாஸ்க்கை கழட்டி கொள்ளலாம் . முடிந்த அளவு சிறியவர்கள், முதியவர்கள் பார்சலில் உணவு வாங்கி செல்வதே சிறந்ததாக இருக்கும் ’’என்கிறார்.