"அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் நன்றி கெட்ட நாய்கள்"- திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் நன்றி கெட்ட நாய்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தன் வீட்டுப் பிள்ளைகள் தவெக செல்வதைத் தடுக்காதவர்களுக்கு வேட்டி, மீசை எதற்கு?அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சென்றவர்கள் திமுக - அதிமுக கூட்டணி என்று பேசுகிறார்கள். கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு அறிவு வேண்டாமா? புரட்சி தலைவர் தயவால், அம்மாவின் ஆசியால் எடப்பாடியார் அன்பால் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். பல கோடி சொத்து வைத்திருக்கும் விஜய் அவரது சொந்த பணத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் நன்றி கெட்ட நாய்கள். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் தவெகவுக்கு சென்றனர். எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தவர்களிடம் ரூ.50 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்துள்ளது. ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட்டால் தோல்வி அடைய செய்வோம்.” என்றார்.