“எம்ஜிஆர் படங்களை விஜய் பயன்படுத்த கூடாது” - திண்டுக்கல் சீனிவாசன்
Feb 15, 2026, 16:37 IST
விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன். “மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருந்தாலும் எங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உரியவர்கள். அவர்களின் பெயரை பிசினஸ் ஆரம்பிக்க வந்திருக்கும் விஜய் பயன்படுத்தாமல் இருப்பது அவருக்கு நல்லது. எம்ஜிஆர் படங்களை விஜய் பயன்படுத்த கூடாது. விஜய் கூட்டத்தில் உயிரிழந்தவருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். 50% வாக்கு இருப்பதாக கூட விஜய் இருக்கலாம். விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும்” என்றார்.