×

“நீ என்ன செய்தாலும் சீட்டு இல்லை” என கலாய்த்த திண்டுக்கல் சீனிவாசன் - கட்சி மாறிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

 

“நீ என்ன செய்தாலும் சீட்டு இல்லை” என கலாய்த்த திண்டுக்கல் சீனிவாசனால் கட்சி மாறிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியின் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அன்பழகன். கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கிய கழகத்தின் மாநில நிர்வாகியாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்கு முன்பே தொகுதி முழுவதும் தாமரை சின்னங்களை வரைந்து வாக்கு சேகரிக்க தொடங்கினார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்பழகனை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன், “நீ என்ன பண்ணாலும் உனக்கு சீட்டு கிடையாது” என்று கலாய்த்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்து காணப்பட்ட அன்பழகன் தற்போது நிலக்கோட்டை தொகுதி பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்படாதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்றார். அதிமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சியினருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதை காரணம் காட்டி அன்பழகன், சசிகலா தொடங்கியுள்ள அனைத்து இந்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிற்கு இடைஞ்சல் கொடுப்பதற்காகவே சசிகலா அணியில் அன்பழகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது.