“மானம்,சூடு,சொரணை இல்லாத கேடுகெட்ட பிறவி தான் எடப்பாடி பழனிசாமி”- திண்டுக்கல் லியோனி
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வடக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத்தலி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, “என் வரலாற்றிலேயே நான் தேதி வாங்கி பேசுகிற கூட்டம் இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு வருகை தந்த புருடா பழனிச்சாமி லேகியம் விற்பனை செய்து சென்றுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொய்யையும் புறட்டையும் எடப்பாடி பழனிசாமி கூறி 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றியடைய போகிறோம் என்று பகல் கனவு காண்கிறார். 1996 ஜெயலலிதாவையே தோற்கடித்த இயக்கம் திமுக. அப்போது ஜெயலலிதா அவர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். அதேபோல் 2026ல் விராலிமலையில் விஜயபாஸ்கர் தோல்வி அடைவார்.
2026 சட்டமன்றத்திற்கு வர வாய்ப்பு கேட்டுள்ளேன். சட்டமன்றத்திற்கு நான் செல்ல நான் மட்டும் ஆசைப்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் என்னை சட்டமன்றத்திற்கு அழைத்தார். நாங்கள் எல்லாம் உங்கள் ரசிகர் சட்டமன்றத்திற்கு வாருங்கள் கலகலப்பாக இருக்கும் என்று கூறினார். அதேபோல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் என்னை சட்டமன்றத்திற்கு வர அழைத்தார். அதிமுக உறுப்பினர்களே சட்டமன்றத்திற்கு வர என்னை அழைத்ததால் அதை கூறி திமுக தலைவரிடம் சட்டமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு கேட்டுள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி ஒரு பேருந்தில் பயணித்து வருகிறார். அதைப் பார்க்கும்போது உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையா ஏன் திருமணம் செய்தோம் என்ற கவலையா என்று கூறி ஊர் ஊராக சென்று லேகியம் விற்கும் மருத்துவரை போல் எடப்பாடி பழனிச்சாமி ஊர் ஊராக சென்று லேகியம் விற்று வருகிறார்.
உடன்பிறப்பே வா என்று தொண்டர்களை நேருக்கு நேராக சந்திக்கிறார் முதலமைச்சர். ஓரணியில் தமிழ்நாடு என்று கூறி பொதுமக்களை வீடு வீடாக சென்று சந்திக்கிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று அரசு திட்டங்கள் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று சேர்க்கிறார் இந்த மூன்று திட்டங்களும் மிகப் பெரிய திட்டங்கள்.வீட்டுக்கு போய் மக்களை சந்தித்து மருத்துவம் பார்த்து வருபவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.ஊர் ஊராக சென்று லேகியம் விற்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. லேகியம் வியாபாரியின் முகத்திரையை கிழிப்பதற்காகத்தான் இந்த கூட்டம். எடப்பாடி பழனிச்சாமியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று இரண்டு பாஜக காரர்கள் தேநீர் கடையில் பேசி வருகின்றனர்.
2026ல் மோடி பிரதமராக வரக்கூடாது என்று பாஜக கூட்டணியில் இருந்து விலகிப் போய் தனியாக நின்றார் எடப்பாடி பழனிச்சாமி. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஏன் 2026 முதலமைச்சராக வர நாம் முளைக்க வேண்டும் என்று பாஜகவினரே பேசுகின்றனர். அதிமுக கூட்டணிக்கு ஒவ்வொரு கட்சியாக பிச்சை எடுப்பதை போல் அழைத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் என்று கூறினார்.அதற்கு அந்த கட்சியினர் உங்கள் முகத்தில் முழித்தாலே விளங்காது என்று எண்ணி உங்களுடன் வர முடியாது, திமுக என்ற கொள்கை கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்று செருப்பால் அடித்ததை போல் அவர்கள் பதில் சொல்லிவிட்டனர். அதற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி விசிக்காவையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விமர்சனம் செய்கிறார். அப்படி விமர்சனம் செய்யும் கட்சிகளை ஏன் இவர் கூட்டணிக்கு அழைத்தார்.என்ன பேசுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.2024ல் அதிமுக பாஜகவை விட்டு வெளியேறிய போது அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தற்போது மீண்டும் பாஜகவில் அதிமுக திறந்து விட்ட போது அதிமுகவினர் ஏன் வெடிவைத்துக் கொண்டாடவில்லை.
மானம் சூடு சொரணை இல்லாத கேடுகெட்ட பிறவி தான் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியை 2026ல் நடைபெறக்கூடிய தேர்தல் மண்ணை கவ்வ வைக்கும். முதலமைச்சர் நான் ஊர்ந்து வருவதை விமர்சனம் செய்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து தான் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஊர்ந்து வந்ததற்கு பிச்சை எடுத்து பிழைத்திருக்கலாம். இதைவிட கேவலமான பிறவி உலகத்தில் பார்த்ததுண்டா. ஆயிரம் முறை செருப்பால் அடித்துவிட்டு ஒரு பதவி தருகிறேன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா இது ஒரு திமுககாரன் அப்படிப்பட்ட பதவியை ஏற்றுக்கொள்வானா? அமித்ஷாவை நேரடியாக சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வழங்கியதாக டெல்லியில் சென்று அமைச்சவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதை இங்கிருந்து செல்லும் பொழுதே தெரிவித்திருக்கலாமே அதைத்தான் ஏன் இந்த திருட்டுத்தனம் என்றுதான் உதயநிதி கேட்டார். ஜெயலலிதா, சசிகலா கால் தற்போது அமித்சாவின் கால். பொதுவெளியில் காலில் விழாமல் கதவை சாத்தி னக் கொண்டு காலில் விழுந்து இருப்பார். அது அவருக்கு வாடிக்கைதான். அமித்ஷா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது கையை கட்டி உட்கார்ந்து இருக்கும் அடிமை எடப்பாடி பழனிச்சாமி. இதே பிரதமர் மோடியை உதயநிதி சந்தித்தபோது கம்பீரமாக நேருக்கு நேர் அமர்ந்து சந்தித்தார். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தது மானம் கட்ட சந்திப்பு. உதயநிதி பிரதமரை சந்தித்தது கம்பீரமான சுயமரியாதையான சந்திப்பு” என்றார்.