×

சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு பயணம்! சிறைக் கதவுகள் திறக்கிறதா?

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி அபராததத்தையும் அவரது வழக்கறிஞர் மூலம் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். இதனையடுத்து சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலும், சசிகலா
 

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி அபராததத்தையும் அவரது வழக்கறிஞர் மூலம் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். இதனையடுத்து சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலும், சசிகலா விடுதலையும் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. சசிகலா விடுதலைக்கு பின்னர் அதிமுக அவரது கைக்கு சென்றுவிடுமோ என்று கூறப்படுகிறது. சசிகலாவை முன்கூட்டியே வெளியே கொண்டு வருவதற்கான வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சசிகலாவை அவரது குடும்பத்தினர் சந்திக்க வேண்டுமென சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு வரும் 13ஆம் தேதி சசிகலாவை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்காக டிடிவி தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.