டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வாங்க மாட்டாங்க சொன்னீங்களே..? வீடியோவை வெளியிட்டு ஊழியர்களை உரித்து தொங்கவிட்ட மதுபிரியர்!
" இங்கே பாருங்க.. 4 பீர் வாங்க போறேன்.. ரூ.760 அனுப்புறேன்.. எக்ஸ்ட்ரா தான் வாங்குறாங்க.."
டாஸ்மாக்கில் இனி பாட்டீலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினாலும் நிரந்தர பணி நீக்கம் என நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் நேற்று எச்சரித்த நிலையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு..
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்குக் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தாலும் ஊழியர்கள் மீது நிரந்தரப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசால் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மதுபிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. "நான்கு பீர் வாங்கும்போது ரூ.760 அனுப்புகிறேன், நிர்ணயித்த விலையை விட எக்ஸ்ட்ராவாகத்தான் வாங்குகிறார்கள்" என்று மதுபிரியர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசும் வீடியோ மற்றும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
அமைச்சரின் அதிரடி எச்சரிக்கைக்குப் பின்னரும் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது வாடிக்கையாக உள்ளதாகக் கூறும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் பணியாளர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தவெக அமைச்சர் நேற்று எச்சரித்த நிலையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு.. pic.twitter.com/tsLhXgLQO1
— நாளை நமதே (@nalainamate77) September 1, 2026