☰
×

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தவெக? வீடியோவால் சர்ச்சை

 

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரெட்டிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

இந்நிலையில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரத்தி எடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பணமே அது என்றும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

Watch | மதுராந்தகம் இடைத்தேர்தல் - அச்சரப்பாக்கம் பகுதியில் பரப்புரைக்கு வந்த பெண்களுக்கு பணம் விநியோகித்த தவெக நிர்வாகிகள்

வீடியோ எடுப்பதைப் பார்த்ததும், ஆரத்தி எடுத்ததற்காக கொடுக்கும் பணம் எனத் தெரிவிப்பு#SunNews | #TVK | #ByElection pic.twitter.com/A8oBlpMUIf

— Sun News (@sunnewstamil) September 22, 2026