×

உண்மையிலேயே மதுபாட்டிலுடன் குத்தாட்டம் போட்டாரா தவெக எம்.எல்.ஏ? நடந்தது இது தான்..! 

 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஷான். ராமநாதனை எதிர்த்து தவெக சார்பில் ஆர். விஜய்சரவணன், பாஜக சார்பில் எம். முருகானந்தம், நாதக சார்பில் ஜி. கிருஷ்ணகுமார் மற்றும் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், இத்தொகுதியில் அதிகபட்சமாக 77.53% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மே 04, 2026 அன்று சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது, தவெக சார்பில் போட்டியிட்ட ஆர். விஜய்சரவணன் 87,705 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான ஷான்.ராமநாதனை 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், திமுக வேட்பாளர் ஷான்.ராமநாதன் 70,750 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளுப்பட்டு உள்ளார். 

இந்நிலையில் தற்போது, தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள விஜய்சரவணன் மதுபாட்டிலோடு தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் இவ்வாறு மதுபாட்டில்களுடன் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டது தவெக வெற்றிக் கொண்டாட்டத்திற்கானது இல்லை. அது 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய காணொளி என்று சொல்லப்படுகிறது. அதாவது விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக, விஜய்சரவணின் ஒரு நண்பருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட காணொளி.

தற்போது, அந்த காணொளியை விஜய்சரவணன் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார் என்று செய்திகள் வந்ததால் அவருடைய அரசியல் எதிரிகள் யாரோ, இப்போது எடுக்கப்பட்ட காணொளி என்று பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியான மே 04ந் தேதி மாலையே சென்னை புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவர் சென்னையில் இருக்கும் பட்சத்தில், எப்படி இப்படி நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட முடியும் என்று விஜய்சரவணனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.