தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றதா? சட்டமன்றத்தில் பதிலடி கொடுக்கத் தயார் - அமைச்சர் கீர்த்தனா..!!
Jun 20, 2026, 18:50 IST
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது:
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறுவோருக்கு சட்டசபையில் தக்க பதிலடி அளிக்க தயாராக உள்ளேன். தொழில்துறை முதலீடுகள் என்பது நீண்ட செயலாக்கம். முதலீட்டிற்கான பல கட்ட செயலாக்கம் நடைபெறாமல், தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே, தமிழகத்திலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
தமிழகத்தை விட்டு முதலீட்டாளர்கள் எதற்காக, எப்போது வெளியே சென்றார்கள் என்பது குறித்தான அனைத்து விவரங்களுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு கீர்த்தனா கூறினார்.