தவறான தகவல்களை பதிவிட்டதா பிபிசி..? பிபிசி உருது எக்ஸ் பக்கம் முடக்கம்..!
May 10, 2025, 06:30 IST
இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்களை பதிவு செய்யும் ஏராளமான எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக தற்போது பிபிசி உருது எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பக்கத்தில் இந்தியா குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த பக்கத்தை முடக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்றுக்கொண்ட எக்ஸ் நிர்வாகம் உடனடியாக இந்தியாவில் பிபிசி விருது பக்கம் முடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பிபிசி, மணிப்பூர் விவகாரத்தில் சில சர்ச்சைக்குரிய தகவல்களை பரப்பியது என்பதும், அதனால் கடும் கண்டனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.