சாதி பெயரை சொல்லி செல்வபெருந்தகையை திட்டினாரா மாணிக்கம் தாக்கூர் ? இது தான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் பிரச்சனைக்கு காரணமா ?
மாணிக்கம் தாகூர் - அரசியல் அதிகாரத்திற்கு அல்ல ஜாதி அதிகாரத்திற்காகவே சண்டையிடுகிறார்.
மாணிக்கம் தாகூர் பேச்சை கேட்கும் போது அவர் காங்கிரசுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேசுவது போல தெரியலாம். ஆனால் அரசியல் முதிர்ச்சியோடு அந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் காங்கிரஸின் படுதோல்விக்காக வேலை செய்கிறார் என்பது புரியும். காரணம் திமுகவை பகைத்துக் கொண்டு தனித்து போட்டியிட்டாலோ அல்லது தமிழக வெற்றி கழகத்தோடு களம் காணும் பட்சத்தில் காங்கிரஸ் வெற்றி பெற ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை.
அப்படி இருந்தும் அவர் ஏன் இந்த ஆபத்தான ஆட்டத்தை ஆடுகிறார்?
காங்கிரஸின் உள் வட்டாரத்து செய்திகள் வேறொரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக செல்வப் பெருந்தகை இருக்கிறார். அவருக்கு திமுகவோடு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. இந்தத் தேர்தலில் கூட்டணி சமூகமாக நடந்து அதிக எண்ணிக்கையில் காங்கிரசுக்கு எம்எல்ஏக்கள் கிடைத்தால் அது செல்வப் பெருந்தகையை வெற்றிகரமான தலைவராக மாற்றிவிடும். இது தங்களது லாபிக்கு சவாலாக இருக்கும் என்று மாணிக்கம் தாக்கூர் தரப்பு கருதுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஒன்று மாணிக்கம் தாகூர் செல்வப் பெருந்தகையை சாதி ரீதியாக கேலி செய்ததாக சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கேயிடம் செல்வப் பெருந்தகை புகார் தெரிவிக்க உள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய தலைமை எச்சரித்த பிறகும் மாணிக்கம் தாக்கூர் கூட்டணியை சிதைக்கும் வேலையை மூர்க்கமாக செய்வதை பார்க்கும்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.