×

சட்டமன்றத்தில் பொய் சொன்னாரா முதல்வர் விஜய்?

 

தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும், ஆகவே தங்கள் அரசை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என முதல்வர் விஜய் கூறியிருந்த நிலையில், அது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், “எல் நினோவின் காரணமாக இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும். எல்நினோ வெப்ப அலையால் மழை குறைவு என்பதை விவசாயிகள் நன்று அறிவர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த தவேக அரசு செய்யும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் நிதி நெருக்கடியை விட்டுபோய் இருந்தாலும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நலனுக்காக தவெக அரசு சின்சியராகவும், முழு வீச்சிலும் தொடர்ந்து உழைக்கும்” என்றார்.


உண்மையில் இந்த எல்நினோ பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மத்திய அரசு வகைப்படுத்தவில்லை. டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் மேற்கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றுதான் கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கலாம் என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.