☰
×

தவெகவினர் வைத்த பேனர் விழுந்து இளைஞர் பலியா?- காவல்துறை விளக்கம்

 

பேனர் விழுந்து மாணவர் இறந்ததாக கூறப்படும் சம்பவத்தில் காவல்துறையின் விளக்கம் அளித்துள்ளது. அதில் சாலை விபத்தே காரணம்...இது குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


சேலம் கருப்பூர் அருகே பேனர் வைக்கப்பட்டிருந்த பகுதியில், அதனை தவிர்க்க முயன்ற மதுபோதையில் இருந்த இளைஞரின் இருசக்கர வாகனம், கல்லூரி மாணவர் அருணின் வாகனத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 18 வயது அருண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தாயார் காயமடைந்தார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர பேனர்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுவதாக செய்திகள் வெளியானது.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல்துறை, “கருப்பூரைச் சேர்ந்த அருண் (18) என்பவர் BE முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 01.10.26-ம் தேதி மருத்துவரை பார்க்க வேண்டி அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தாயார் சரஸ்வதி (48) என்பவருடன் மருத்துவமனை வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வெள்ளாளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அவருக்கு எதிர் திசையில் ராகுல் (18) என்பவர் குடிபோதையில் அதிவேகமாகவும் ஓட்டி வந்து அருண் வாகனத்தின் மீது மோதியதில் அருணும் அவரது தாயாரும் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக டால்மியா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது அருண் வரும் வழியிலேயே இருந்து விட்டதாகவும் சரஸ்வதி மட்டும் இன்றுவரை சிகிச்சையில் இருந்து வருகிறார். இவர் மீது மோதிய ராகுல் என்பவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது சம்மந்தமாக இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தானது ராகுல் என்பவர் குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்துஅருண் வாகனத்தின் மீது மோதியதாலும், இவர்கள் ஹெல்மெட் அணியாததாலும் இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படுத்துள்ளது. இந்த விபத்திற்கும் அந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை அனுமதியின்றி பேனர் வைத்தற்காக கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.