×

சத்யம் டிவி செய்தியாளர் அலெக்ஸாண்டர் மறைவு - தினகரன் இரங்கல் 

 

சத்யம் டிவி தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் அலெக்ஸாண்டர் மறைவுக்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக  கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வந்த திரு.அலெக்சாண்டர் அவர்கள்,  உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

 அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு  திரு.அலெக்சாண்டர் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.