“திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் என் மனைவி என்னை விஷம் வைத்து கொன்றிருப்பார்”- டிடிவி தினகரன்
போடி பஸ் நிலையம் அருகே தேவர் சிலை திடலில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பரப்புரை செய்தார்.
பரப்புரை வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன், “எனக்கு உடல்நிலை சரியில்லை, டாக்டர் பரமசிவத்திடம் மருத்துவம் சிகிச்சை பெற்று நாராயணசாமிக்காக ஓட்டு கேட்க வந்தேன். பிரதமர் மோடி நாகர்கோயில் வந்தார், நான் போடிக்கு போறேன் என்று சொல்லி வந்து விட்டேன். அமமுக திமுகவுடன் கூட்டணி பேச்சு என்று அடிபட்டது. அப்படி நான் செய்திருந்தால் என் மனைவி என்னை விட்டு விரட்டி இருப்பார், ஏதாவது சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றிருப்பார்
எல்லோரும் விரட்டி விட்டதால் திமுகவில் சேர்ந்துள்ளார் பன்னீர். 1989ம் ஆண்டு ஜெயலலிதா அம்மா 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போடி தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது இந்த ஓபிஎஸ் எங்கே இருந்தார் என்று தெரியாது. 2006ல் நான் சொன்னதால் தான் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி அமைச்சர்,துணை முதலமைச்சர் என தொடர்ந்து கிடைத்தது. அம்மா ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தான் சொன்னார், தர்மயுத்தம் நடத்தினார். அதற்காகத்தான் ஒரு நபர் கமிஷன் விசாரணை நடைபெற்றது. தர்மயுத்தம் தர்மன் நடத்த வேண்டும், ஆனால் இவர் துரியோதனனாக இருக்கிறார். தொடர்ந்து தர்மயுத்தம் என்று ஏமாற்றி அனைவரின் கவனத்தையும் திசை திருப்பினர்.மத்திய அரசு எஸ்ஐஆர் என்ற தேர்தல் வாக்காளர்கள் வரையறையில் 75 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. அது போலி வாக்காளர்கள் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் கோடி கடனாக இருக்கிறது. ரயில்வே திட்ட மேம்பால பணிகள் நடப்பதால் விரைந்து முடிக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல் டெல்லியின் கதவை தட்டினோம் எங்களுகான கதவு திறக்கப்பட்டது” என்றார்.