×

தீரன் சின்னமலை பிறந்த நாள் - தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி!!

 

தீரன் சின்னமலை பிறந்த நாளில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர்,   இளம் வயதிலேயே  வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க   பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார். பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர்.