×

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்... அதிமுகவில் இணைந்தார் தர்மர் எம்.பி.

 

அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் எம்.பி.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.எல்.ஏக்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்.  அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடங்கியது முதல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டவர் தர்மர். நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் தலைமையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள்  ஒட்டுமொத்தமாக மாண்புமிகு எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியிடம் இணைந்தார்.